மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மழை குறைந்த நிலையிலும் பாபநாசம் அணை 100 அடியை எட்டியதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் பாபநாசம் அணையின் நீர்மட்டம் நேற்று முன்தினம் 94.80 அடியாக இருந்தது நேற்று 97 அடியானது. இந்நிலையில் பாபநாசம் அணை நீர்மட்டம் 100 அடியை எட்டியது அணைக்கு வினாடிக்கு 154.75 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. வருகிற 30ம் தேதியோடு தென்மேற்கு பருவமழை முடிவுக்கு வரும் நிலையில் அதன் பின்னர் வடகிழக்கு பருவமழை தான் கை கொடுக்கும் காலமாகும்.