நெல்லையில் பெயர் பெற்ற அல்வா தயாரிப்பில் இறங்கிய ஆவின் நிறுவனம் நெய் அல்வா மற்றும் பால் சர்பத்தை தயாரித்துள்ளது
இதன் அறிமுக விழா நெல்லை ஆவின் தலைமை அலுவலகத்தில் நடந்தது. நெல்லை-தூத்துக்குடி மாவட்ட ஆவின் தலைவர் சின்னத்துரை ஆவின் நெய் அல்வா மற்றும் பால் சர்பத்தை அறிமுகப்படுத்தி விற்பனையை தொடங்கி வைத்தார்.
ஏற்கனவே நெல்லை- தூத்துக்குடி மாவட்ட ஆவின் நிறுவனம் பால், நெய், பால்கோவா உள்ளிட்ட பால் பொருட்களை விற்பனை செய்து வருவது குறிப்பிடத்தக்கது
தற்போது தயிர் பாக்கெட், சர்க்கரை நோயாளிகளுக்கான மைசூர்பாகு, பால்கோவா, மில்க் கேக், மில்க் சேக் உள்ளிட்ட 20 வகையான பொருட்களை விற்பனை செய்து வருகிறது.
ஆவின் நெய் அல்வா ஒரு கிலோ ரூ.240-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வருகிற 31-ந்தேதி வரை 1 கிலோ அல்வா வாங்கினால் ½ கிலோ அல்வா இலவசமாகவும், ½ கிலோ அல்வா வாங்கினால் ¼ கிலோ அல்வா இலவசமாகவும் வழங்கப்படுகிறது ஆவின் பாலகம் அனைத்திலும் பால் சர்பத் 250 மில்லி ரூ.20-க்கு விற்பனை செய்யப்படுகிறது.