நெல்லை மாவட்டம் முக்கூடல் அருகே உள்ள அரியநாயகிபுரம் பொட்டல் காலனியில் பல மாதங்களாக குடிநீர் வராததால் பொதுமக்கள் நெல்லை- கடையம் சாலையில் ஒரு மணி நேரமாக பஸ் மறியலில் ஈடுபட்டனர். போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அவர்களிடம் முக்கூடல், சேரன்மகாதேவி போலீஸ் அதிகாரிகள் பேசி சமரசம் செய்தனர்.
‘தாமிரபரணியிலிருந்து அரை கி.மீ, தூரத்தில் இருந்தும் கடந்த ஓராண்டாக குடிநீருக்கு மிகவும் சிரமப்பட்டோம். இரு மாதங்களாக அறவே தண்னீர் வரவில்லை. மனு நீதி நாளில் நெல்லை கலெக்டரிடமும் முறையிட்டோம். ஆனால், பலனில்லை’ என பொதுமக்கள் தெரிவித்தனர்.