வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நலத்திட்டங்கள் வழங்கும் நிகழ்ச்சி ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தலைமையில் நடைபெற்றது. நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியின் இறுதியில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் துரைமுருகன், மேகதாது அணை தொடர்பாக எழுப்பபப்பட்ட கேள்விக்கு, ‘கர்நாடகாவினர் எதை தான் அனுமதித்துள்ளனர், காவேரி நடுவர் மன்றம் கொடுத்த தீர்ப்பையும் அவர்கள் மதிப்பது இல்லை, உச்ச நீதிமன்றம் மாற்றிக்கொடுத்த தீர்ப்பையும் மதிப்பதில்லை, ஆக சட்டத்தையும், உச்ச நீதிமன்றத்தையும் மதிக்க மாட்டோம் என்று கூறி வருகின்றனர், அவர்கள் அப்படி தான் சொல்வார்கள்’ என்றார்.
உதகையில் உள்ள மாயாற்றின் குறுக்கே அணை கட்டும் கோரிக்கை தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, ’தமிழ்நாட்டில், ஒவ்வொரு மாநிலத்தோடும் நீர் ஆதாரம் சார்ந்த பிரச்சனைகள் உள்ளதால் இருக்கின்ற பிரச்சனையை தீர்த்துக்கொண்டால் போதும் என்று தான் உள்ளோம்’ என்று சமாளித்தார்.














