5ஆம்தேதி இயக்க கோவையில் 530 பஸ்கள் தயார்

0
1194



கோவை மாவட்டத்தில் இருந்து சென்னை, மதுரை, நெல்லை, தென்காசி, நாகர்கோவில், கரூர், திருச்சி ,ஈரோடு, சேலம், திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன. இது தவிர கோவை மாவட்டத்தில் உள்ள புறநகர் பகுதிகளான பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், அன்னூர், வால்பாறை, கிணத்துக்கடவு, சூலூர், காரமடை உள்ளிட்ட பகுதிகளுக்கு என மொத்தம் 1012 பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையே மாவட்டத்தில் கொரோனா பரவியதை அடுத்து மே மாதம் 10-ம்தேதி முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட்டால் பொதுப் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது. தொற்று குறைந்ததை தொடர்ந்து பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டது. பஸ் போக்குவரத்திற்கு அனுமதி கொடுத்ததும் கோவையிலுள்ள டெப்போவில் பஸ்களை சுத்தம் செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.

வருகிற திங்கட்கிழமை 5-ஆம் தேதி காலை 5 மணியில் இருந்து புறநகர் பகுதிகளுக்கும் திருப்பூர் ஈரோடு போன்ற வெளி மாவட்டங்களுக்கு முதற்கட்டமாக 530 பஸ்கள் இயக்கப்படுகின்றன.

இதுகுறித்து அதிகாரி கூறியதாவது:- கோவை மாவட்டத்தில் முதல் கட்டமாக 530 பஸ்கள் புறநகர் வெளிமாவட்டங்களுக்கு இயக்கப்பட உள்ளன. பஸ்களில் பயணிக்கும் பயணிகள் அனைவரும் முகக் கவசம் அணிவது சமூக இடைவெளியை கடைபிடிப்பது டிரைவர்கள் கண்டக்டர்கள் கண்காணிக்க வேண்டும். பஸ்ஸில் ஏறுவதற்கு முன்பு பயணிகளின் வெப்பநிலை பார்க்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது. பயணிகள் வருகையை பொறுத்து கூடுதல் பஸ்கள் இயக்கப்படும் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here