கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட கிழக்கு மண்டல பகுதிகளில் தமிழக மின் வாரியம் மற்றும் மதுவிலக்கு அமலாக்கத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்து கொண்ட மக்கள் சபை கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அவர் பொதுமக்கள் அளித்த குறைகள் தொடர்பான பல்வேறு மனுக்களை பெற்றுக்கொண்டார்.
இந்நிலையில், கோவையில் நேற்று பீளமேடு, சிங்காநல்லூர் எஸ்.ஐ.எச்.எஸ் காலனி உட்பட பல்வேறு பகுதிகளில் அதிமுக சார்பில் போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது. அதில் ‘திமுக விடியல் அரசின் 5 மாத கால சாதனை’ என்ற பெயரில் விமர்சன வாசகங்கள் எழுதப்பட்டிருந்தன.
இதுதொடர்பாக பீளமேடு போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில், போலீசார் பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் என்ற பிரிவின் கீழ் அதிமுக நிர்வாகி ரகுபதி மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.














