அ.ராசாவை கைது செய்ய வேண்டும்: காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஆவேசம்

0
866

‘இந்துவாக இருக்கும் வரை நீ சூத்திரன்’ என்று திமுக எம்பி அ. ராசா சமீபத்தில் பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியானது.இந்த பேச்சை கண்டித்து காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் அமெரிக்கை நாராயணன் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


அமெரிக்கை நாராயணன் தனது டுவிட்டரில், ‘

தி.மு.க. துணைப் பொதுச்செயலரும் முன்னாள் மத்திய அமைச்சருமான அ .ராசா மாற்று மதத்தைச் சேர்ந்தவர்.. ‘ என்று குறிப்பிட்டுள்ளார்.

அ. ராசா பட்டியலினத்தவருக்கான தனித் தொகுதிகளில் இதுவரை போட்டியிட்டுள்ள நிலையில் கூட்டணிிி கட்சி பிரமுகர் வெளியிட்டுள்ள கருத்து விவாதத்தை கிளப்பியுள்ளது.

மேலும், ‘இந்துகளை இழிவாகப் பேசும் மாற்று மதத்தைச் சேர்ந்த அ .ராசா போன்றவர்களின் பிரிவினைவாத பேச்சை தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி உரத்த குரலில் கண்டிக்காமல் இருப்பது தான் தேசிய அளவில் காங்கிரஸ் வீழச்சிக்கு முக்கிய காரணம்.


மதத்தின் பெயரால் காழ்ப்புணர்ச்சியை உண்டாக்கும் அ .ராசாவை கைது செய்ய முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட வேண்டும்‘என அந்தப் பதிவில் கோரி இருப்பது கூட்டணி உறவை சீண்டிப் பார்ப்பதாக உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here