கூடன்குளம் அருகே மீன் அரவை ஆலை கழிவு நீரால் விளை நிலம் நாசம் – கால் நடைகள் உயிரிழப்பு

0
590


கூடன் குளம் அருகிலுள்ள இருக்கன் துறை பகுதியில் சுமார் 3க்கும் மேற்பட்ட மீன் அரவை ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு செயல்பட்டு வரும் தனியார் ஆலையான ஹமீது மீன் மரைன் ஆலைக்கு கேரளாவிலிருந்து கொண்டு வரப்படும் நெத்திலி மீன் அரவை ஆலையில் மீன் எண்ணெய் மற்றும் கோழி தீவனம் போன்றவைகள் குறைந்த விலையில் விற்கப்படும் சிறிய ரக நெத்திலி மீன்கள் மூலம் தயாரிக்கப்படுகின்றன. இவைகள் பெரும்பாலும் கேரளாவில் அதிகமாக கிடைப்பதால் அங்கிருந்து லாரிகள் மூலம் இங்கு கொண்டு வரப்படுகின்றன.அவ்வாறு கொண்டு வரப்படும் பச்சை மீன் கள் மூலம் முதலில் மீன் எண்ணெய் உற்பத்தி செய்யப்பட்டு பின்னர் அதன் கழிவுகள் மறு சுழற்சியின் மூலம் கோழி த் தீவனம் தயார் செய்வதற்கு பயன் படுத்தப்படுகிறது.


இந்த ஆலையில் பயன் படுத்திய கழிவு நீரை மீன் அரவை ஆலையில் அதற்கென பைப் லைன் பயன் படுத்தி அதனை சுத்திகரிப்பு செய்து தனியாக விட வேண்டும் என்பது அரசின் விதியாகும். ஆனால் அதனை மீறி ஆலையிலிருந்து கேரளா விற்கு திரும்பி செல்லும் லாரிகளில் கழிவு நீர் கேன்களில் ஏற்றப்பட்டு இருக்கன் துறை சுற்று வட்டார விளை நிலங்களில் ஊற்றி கொட்டப்படுகிறது.

இதனால் விளை நிலங்கள் மீண்டும் பயிரிட முடியாதபடி தரிசு நிலங்களாகவும் மேய்ச்சல் புறம்போக்கு நிலம் என்பதால் அங்கு புல்கள் மற்றும் செடிகளை உண்ணும் கால் நடைகள் உயிழக்கும் அபாயம் ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும் தற்போது மழைக்கால் என்பதால் அங்கு கொட்டப்படும் கழிவுநீர்; அப்பகுதியில் செல்லும் கால்வாயில் கலந்து விளைநிலங்களுக்கு செல்லும் நீரும் மாசுப்படுகிறது. அப்பகுதியில் மக்களின் குடிநீர் தேவைக்காக அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளை கிணறுகளில் கலக்க கூடிய நிலையில் உள்ளது.

எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக இதில் தலையிட்டு அரசு விதிமுறைகளை பின்பற்றால் செயல்பட்டு வரும் மீன் அரவை ஆலைகளின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென இப்பகுதிபொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here