சந்திராயன் லாண்டர் நிலவில் தரையிறங்கியதில் சிக்கல்

0
1271

சந்திரயான் 2 விண்கலத்திலிருந்து நிலவின் தென் துருவத்தில் லாண்டர் பிரக்யான் தரையிறங்குவதில் இறுதி நேரத்தில் பிரச்னை ஏற்பட்டது.
1.40க்கு இன்று அதிகாலை நிலவுக்கு 30 கிமீ தூரத்தில் நிலவை  நோக்கி அதை இறக்கிய நிலையில் திடீரென சிக்னல் கிடைக்கவில்லை.
இதனால் பெஙக்ளூரு இஸ்ரோ தளத்தில் விஞ்ஞானிகளும் அவர்களோரு இருந்த பிரதமர் மோடியும் வருத்தம் அடைந்தனர்.
எனிலும், விஞ்ஞானிகளை பிரதமர் தேற்றினார்.
பின்னர் பேசிய போது, ‘நேற்றிரவு நான் உங்களை புரிந்துகொண்டேன். உங்கள் கண்கள் பலவற்றை கூறின. மிகுந்த நம்பிக்கையுடன் முன்னேறியபோது எல்லாமே மாறிவிட்டது. இந்த கணத்தை உங்களுடன் நானும் இருந்து அனுபவித்தேன். ஏன் இப்படி நடந்தது என்ற கேள்வி எழுந்தது. ஒவ்வொரு கணமும் இதற்காக உழைத்து நீங்கள் முன்னே கொண்டு சென்றீர்கள். விண்வெளி திட்டங்களில் மிகச்சிறப்பானவை இனி வரும் காலங்களில் நிகழும். இந்தியா விஞ்ஞானிகளான உங்களுக்கு துணை நிற்கும்’ என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here