கள்ளழகர் திருவிழா கூட்டத்தில் கைவரிசை காட்டிய ஆந்திர கும்பல் கைது

0
424


மதுரை சித்திரை திருவிழா இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது .முக்கிய நிகழ்ச்சியான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்குதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

இந்த திருவிழாக் கூட்டத்தில் தத்தனேரி பெரியசாமி நகர் நான்காவதுதெருவைச் சேர்ந்த செல்லம்மாள் ( 60 )என்பவர் வைகை வடகரை ஒபுலா படித்துறை பாலம் சந்திப்பில் நின்று அழகரை தரிசித்த போது அவர் அணிந்திருந்த 5 பவுன் தங்கச்சங்கிலியை ஒரு கும்பல் திருடி விட்டது .

அரசரடி தமிழ்தென்றல் வீதியை சேர்ந்த பேச்சியம்மாள் ( 67) என்பவர் ஆழ்வார்புரத்தில் நின்று அழகரை தரிசித்த போது அவர் அணிந்திருந்த 3 பவுன் நகையும் திருடு போய்விட்டது. இவரைப்போல டீச்சர்ஸ் காலனி சுப்பிரமணியபுரம் மூன்றாவது தெருவைச் சேர்ந்த தங்கம் 67 என்பவர் வைகை வடகரையில் சாமி கும்பிட்ட போது அவரிடமிருந்தும் இரண்டரை பவுன் தங்க சங்கிலி திருடு போய்விட்டது.

திண்டுக்கல் நாராயண பிள்ளை தோட்டத்தைச் சேர்ந்த ஞானம்( 67 )என்பவர் அரசு மருத்துவமனை அருகே மார்ச்சுவரி ரோட்டில் நின்று நின்றபோது அவரிடமிருந்து இரண்டரை ப சங்கிலி திருடப்பட்டது. திருமங்கலம் சாத்தங்குடி கண்டு குலத்தைச் சேர்ந்த முத்துலட்சுமி (50 ) என்பவர் ஆழ்வார்புரத்தில் சாமிகும்பிட்டபோது போது அவர் அணிந்திருந்த ஐந்து பவுன் சங்கிலியும் திருடப்பட்டது. சிட்டம்பட்டி பாரைவீட்டைச்சேர்ந்த காந்தி (50) மார்ச்சுவரி ரோட்டில் சாமி கும்பிட்டுக் கொண்டிருந்த போது அவரிடம் இருந்து ஒன்றரை பவுன் சங்கிலி திருடப்பட்டது.

இந்த சம்பவங்கள் குறித்து அனைவரும் மதிச்சியம் போலீசில் புகார் செய்தனர்.போலீசார் வழக்குப்பதிவு செய்து திருட்டு கும்பலை அடையாளம் கண்டு அவர்களை சுற்றிவளைத்து பிடித்தனர் .அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் ஆந்திர மாநிலம் சித்தூர் தாலுகா நகரி என்ற ஊரைச் சேர்ந்த பாபு மனைவி சுமலதா (32), அதே பகுதியை சேர்ந்த முனியசாமி மனைவிலில்லி ( 45), பாலமுருகன் மனைவி புஜ்ஜி ( 38), பாபு மனைவி மீனாட்சி (48) என்று தெரியவந்தது.

அவர்கள் திருடிய பத்தொன்பது பவுன் நகைகளில் ஒன்பதரை பவுன் நகைகளை பறிமுதல் செய்தனர் .மேலும்அவர்களிடமிருந்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர் .



LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here