மதுரை திமுக பிரமுகர் மகன் காதலியுடன் காவல் நிலையத்தில் தஞ்சம்

0
1007

மதுரை வசந்த நகர் பகுதியைச் சேர்ந்த திமுக பிரமுகர் மிசா செந்தில். இவரது மகன் முத்துக்குமார் மதுரை காரியாபட்டி அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் படித்து வந்தார். அதே கல்லூரியில் பயின்று வந்த உசிலம்பட்டியை சேர்ந்த அக்கினி மகள் பிரியதர்ஷினியை காதலித்து வந்துள்ளார்.

ஐந்து வருடமாக காதலித்து வந்த இவர்களின் காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் இன்று நண்பர்களின் உதவியுடன் மதுரை ஜெய்ஹிந்திபுரம் பகுதியில் உள்ள வீரமாகாளியம்மன் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்.

திருமண விவகாரம் மணமகளின் வீட்டாருக்கு தெரியவந்த நிலையில் எதிர்ப்பு தெரிவித்ததோடு கொலை மிரட்டலும் விடப்பட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து மதுரை சுப்பிரமணியபுரம் காவல் நிலையத்தில் காதல் ஜோடிகள் தஞ்சம் அடைந்தனர். அவர்களுக்கு காவல்துறையினர் பாதுகாப்பு அளித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here