குற்றாலத்தில் பெண்காவலரை தாக்கிய குத்தகைதாரர் கைது

0
1118

குற்றாலம் அருவிக்கரையில் உடை மாற்றும் அறையை ஆறுமுகம் என்பவர் குத்தகைக்கு எடுத்துள்ளார். அவர் 5 ரூபாய் கட்டணத்திற்கு பதிலாக 29 ரூபாய் வசூலித்ததாக அருவியில் குளித்த பெண்கள் பாதுகாவலுக்கு நின்றிருந்த பெண் காவலரிடம் புகார் தெரிவித்தனர்.
இதையடுத்து ஆறுமுகத்திடம் பெண் காவலர் தட்டிக்கேட்டுள்ளார். இதில் ஆத்திரம் அடைந்துள்ள ஆறுமுகம் பெண் காவலரை தாக்கியுள்ளார். தகவலறிந்த குற்றாலம் போலீசார் 5 பிரிவுகளில் வழக்குப்பதிந்து அவரை கைது செய்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here