விவசாய பயிர்க்கடனை தள்ளுபடி செய்து முதல்வர் எடப்பாடி அறிவித்துள்ளார். ரூ.12,110 கோடி தள்ளுபடி செய்யப்படுகிறது. 16.43 லட்சம் விவசாயிகளின் கடன் தள்ளுபடி செய்யப்படுவதாக 110 விதியின்கீழ் முதல்வர் சட்டமன்றத்தில் அறிவித்தார்.
கொரோனா, புயல் கரணமாக விவசாயிகள் கஷ்டப்பட்டனர். எனவே, விவசாய கடன் தள்ளுபடி செய்யப்படுகிறது. விரைவில் அரசாணை வெளியிடப்படும். தள்ளுபடிக்கான நிதி வரும் பட்ஜெட்டில் ஒதுக்கப்படும் என்று முதல்வர் பேசினார்.













