:
தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தின் மாநில பொறுப்பாளர்களுக்கான தேர்தல் நடைபெற்றது.
இதில், மாநில தலைவராக மதுரை இராஜன் சேதுபதி , மாநில பொதுச் செயலாளராக கடலூர் சந்தானகிருஷ்ணன் , மாநில பொருளாளராக திருவாரூர் ராஜ்குமார் , மாநிலத் துணைத் தலைவராக திருவள்ளூர் பாலகிருஷ்ணன் ,
மாநில செயலாளர்களாக சிவகங்கை செல்வன் மற்றும் விருதுநகர் பாண்டியன் , மாநில அமைப்புச் செயலாளராக ராமநாதபுரம் அசோக்குமார் போட்டியின்றி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்
இத்தக்கவலை தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தின் மாநில தேர்தல் ஆணையர் முருகன் தெரிவித்தார்.
கிராம நிர்வாக அலுவலர்களுக்கான பணி மாறுதல்கள் இணையதளம் மூலமாக இனிவரும் காலங்களில் செயல் படுத்தப் படும் என, தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இதற்கு கிராம நிர்வாக அலுவலர் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது.













