கோவை போத்தனூர் அடுத்த வெள்ளலூர் மனோன்மணி வீதியைச் சேர்ந்தவர் மோகனசந்திரன் என்பவரின் மனைவி சாரதா (36). இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மதுமிதா தேவி (15 )என்ற மகள் இருந்தனர். சாரதாவுக்கு ம் அவரது கணவர் மோகன சந்திரனுக்கும் இடையே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து சாரதா கணவர் மோகன சந்திரனை பிரிந்து கணவரின் சகோதரர் பாலச்சந்திரனுடன் தனியாக வீடு எடுத்து வசித்து வருகிறார்.
மகன் மற்றும் மகள் மதுமிதா தேவி தந்தையின் வீட்டில் வசித்து வந்தனர். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு மதுமிதா தேதி ஆண் நண்பர்களுடன் பேசுவதை அவரது தந்தை மோகனசுந்தரம் கவனித்தார். இதுகுறித்து அவரை எச்சரிக்கை விடுத்தார். தொடர்ந்து மதுமிதா தேவி தனது தம்பியுடன் அம்மா சாரதா வீட்டிற்கு வந்துவிட்டார். ஆனால் அங்கு வந்த பிறகும் ஆண் நண்பர்களுடன் பேசுவதை வழக்கமாக வைத்திருந்தார் .இதை அவரது தாயார் சாரதாவும் கண்டித்துள்ளார்.
தொடர்ந்து மதுமிதா தேவி ஆண் நண்பர்களுடன் பேசி வருவதை அடுத்து சாரதா தான் பணிபுரியும் தனியார் மருத்துவமனையில் இரவு பணி வாங்கிவிட்டு பகலில் மகளை வீட்டில் இருந்தபடி கண்காணித்து வந்தார் .அதேபோல சாரதா வேலைக்கு சென்ற பின் பாலச்சந்திரன் வீட்டிலிருந்து மதுமிதா தேவியை கண்காணித்து வந்துள்ளார். இதனால் மதுமிதா தேவி மனமுடைந்த நிலையில் இருந்து வந்தார்.
இந்நிலையில் சாரதா பணிக்குச் சென்ற பின் வீட்டில் தனியாக அறையிலிருந்த மதுமிதா தேவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.