கேளம்பாக்கத்தில் உள்ள டான்ஸ் – உடான்ஸ் சாமியார் சிவசங்கர் பாபாவின் சுஷில் ஹரிபள்ளியில் நடந்த பாலியல் அத்துமீறல்கள் குறித்து குழந்தைகள் நலக்குழுவினர் ஆய்வு நடத்தினர். பின்னர் அரசுக்கு ஒரு பரிந்துரை கடிதம் அனுப்பியுள்ளனர்.
அதில், பள்ளியில் நடந்த சம்பவங்களால் மாணவர், பெற்றோர் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். பள்ளியை நிறுவிய சிவசங்கர் பாபா மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்பதற்கு நிர்வாகமும் உடந்தையாக இருந்துள்ளது. எனவே, பள்ளியை தமிழ்நாடு அரசே ஏற்று நடத்தவேண்டும் என்று பரிந்துரையில் குழந்தை நலக்குழுமம் குறிப்பிட்டுள்ளது.












