குழந்தையை பார்க்க மனைவி வீட்டார் அனுமதிக்காததால் பாலத்தில் இருந்து குதித்து வாலிபர் தற்கொலை முயற்சி

0
758

:

மதுரை பெரியார் பேருந்து நிலையம் எல்லீஸ் நகர் மேம்பாலம், ஒரு இளைஞர் நாடு பாலத்தில் நின்று குதிக்கப் போவதாக சத்தம் போட்டுள்ளார். இதைக்கண்ட, வாகன ஓட்டிகள் வாகனத்தை அப்படியே நிறுத்திவிட்டு அவரைக் கீழே இறங்கச் சொல்லி கேட்டுள்ளனர்.

அதில் ஒருவர் மேலே சென்று எதுனாலும் பேசி தீர்த்துக்கொள்ளலாம், கீழே இறங்கு எனவும் சொல்லி பார்த்துள்ளார்.அவர் இறங்க மறுக்கவே மதுரை டவுன் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு மற்றும் பேரிடர் மீட்பு குழுவினர் அவரிடம் சாதுர்யமாகப் பேசி கீழே இறக்கினர். பின், அவரை விசாரித்தபோது மதுரை எல்லீஸ் நகர் சேர்ந்த லெனின் குமார் ( 20 ) என்ற இவருக்கும், ஸ்ருதி என்ற பெண்ணுக்கும் இரண்டு ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்து,மூன்று நாட்களுக்கு முன் குழந்தை பிறந்துள்ளது.

குழந்தையை பார்க்க வைத்தியநாதபுரத்தில் உள்ள பெண் வீட்டார் பார்க்க அனுமதிக்காத காரணத்தினால், இவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக தெரிவித்தார். சம்பவம் குறித்து, லெனின்குமாரை காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here