மதுரை மாவட்டம், வாடிப்பட்டி வட்டம்,
சோழவந்தான், ரிஷபம் தென்கரை, முள்ளிப்பள்ளம், மன்னாடிமங்கலம், உட்பட
பகுதியிலுள்ள ஊராட்சிக்கு உட்பட்ட கிராமங்களில் சுமார் 1500 மேற்பட்ட ஏக்கரில் வாழை விவசாயம் செய்து வருகின்றனர் .
ஊரடங்கு உத்தரவால், சுப நிகழ்ச்சிகள்உள்பட நிகழ்ச்சிகள் நடத்த அரசு தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதனால், வாழை நல்ல பலன் அளித்தும் இலை குலைகளை விற்பனை செய்ய முடியாமல் விவசாயிகளுக்கு பெருத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து, ரிஷபம் விவசாயி பழனியப்பன் கூறிய போது, ‘வாழைப்பழம் விற்பனை மிகமிகக் குறைந்து உள்ளது.
மகசூல் கிடைத்த நேரத்தில் வாழைத்தாரை வேலையாட்களை வைத்து வெட்டி விற்பனை செய்ய கடைக்கு கொண்டு சென்றால் தாருக்கு 50 ரூபாய் குறைவாக கொடுக்கிறார்கள்.
வயலில் இருந்து வேன் நிற்கக் கூடிய இடத்திற்கு செல்வதற்கு ஒரு தாருக்கு 20 ரூபாய் கூலி,கொண்டு செல்லக்கூடிய வேனுக்கு தாருக்கு 10ரூபாய் கொடுத்தது போக மீதி ரூ. 20 கிடைக்கிறது.
ஏக்கருக்கு சுமார் 40 ஆயிரம் ரூபாய் செலவழித்தும் பலன் இல்லை.
மொத்த வியாபாரிகளும் விற்பனை இல்லை. வாழைத்தார்களை கொண்டு வரவேண்டாம் என்று கூறிவிட்டனர். இதனால், வாழை தார் வெட்டாதாதால் மரத்திலே
வாழை பழங்கள் அழுகி சேதமடைந்து வருகிற
ஏ.ற்கனவே , கடன் வாங்கி செய்த விவசாயத்தில் வருவாய் கிட்டாத நிலையில் மீண்டும் விவசாயத்தை தொடர முடியுமா என்று தெரியவில்லை இதனால், வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் நேரடியாக வந்து ஆய்வு செய்து அரசுக்கு உரிய அறிக்கையை கொடுத்து விவசாயிகளுக்கு முழுமையான நிவாரணம் பெற்றுத்தர வேண்டும் .
கடந்த ஆண்டும்் விவசாயிகளுக்கு இதுபோன்று நஷ்டம் ஏற்பட்டு,நிவாரணம் கிடைக்காமல் போனது. இந்த ஆண்டாவது ஏற்பட்டுள்ள நஷ்டத்திற்கு புதிய அரசு நிவாரணம் வழங்க வேண்டும்’ என்றார்்