தக்கலை அருகே கீழ மருவூர்கோணம் பகுதியை சேர்ந்தவர் சுதகுமாரன் (வயது 54). இவர் திருவட்டார் அருகே வீயனூரில் உள்ள மின் வாரிய அலுவலகத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார். சில ஆண்டுகளுக்கு முன்பு பணியின் போது இவர் மீது மின்சாரம் தாக்கி படுகாயம் ஏற்பட்டதால் அதற்கு தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். இதனால் பணிக்கு சரிவர செல்ல முடியவில்லை. மேலும் கடன் தொல்லையும் ஏற்பட்டது.
மனவேதனையுடன் காணப்பட்ட சுதகுமாரன் நேற்று தனது தாயார் வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.









