உடன்குடியில் ரூ.6.5 லட்சம் தங்க கட்டிகளை மீட்டு போலீசாரிடம் ஒப்படைத்த சாத்தான்குளம் தொழிலாளிகள்

0
3703

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் தனியார் ஏஜென்சியில் வேலை பார்த்து வரும் ரஞ்சித் குமார் (32) மற்றும் குமார் (35) ஆகியோர் பணி நிமித்தமாக சாத்தான்குளம், உடன்குடி, திசையன்விளை, பரமன்குறிச்சி, உள்ளிட்ட இடங்களுக்கு பலசரக்கு பொருள்களை கொண்டு சென்று வியாபாரம் செய்து வருகின்றனர்.

அவர்கள் உடன்குடி கீழ பஜார் பகுதியில் சென்று கொண்டிருந்த போது சாலையோரத்தில் கீழே ஒரு மணிபர்ஸ் கிடந்துள்ளது. இதனை எடுத்து பிரித்து பார்த்த போது அதில் தங்க கட்டிகள் மற்றும் தங்கச் செயின் ஆகியவைகள் இருந்தன. அவர்கள் பர்சை குலசேகரன் பட்டினம் காவல் ஆய்வாளர் பிரபு பாஸ்கரன் முன்னிலையில் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

போலீசார் நகைகளை சோதித்து பார்த்ததில் அதிலிருந்த 3 செம்பு கலக்காத தூய தங்க கட்டிகளும், 36.540 கிராம் எடை கொண்டது. செயின் 15.700 கிராம் என இருந்தது மொத்தமாக 52.240 எடை இருந்தது . இதன் மதிப்பு கிட்டத்தட்ட 6.5 லட்சம் ரூபாய் இருக்கும்.

.நகைகளை பெற்றுக் கொண்ட காவல் ஆய்வாளர் நேர்மையுடன் ஒப்படைத்த இரு தொழிலாளிகளையும் பாராட்டி சால்வை அணிவித்தார். நகை மற்றும் தங்க கட்டிகளை தவறவிட்டது யார்? என்றுபோலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொழிலாளிகள் பர்சை போலீசாரிடம் ஒப்படைத்த போது போது உடன்குடி வணிகர்கள் முன்னேற்ற சங்க தலைவர் அம்புரோஸ், செயலாளர் சதீஷ், துணைத் தலைவர் பிரதீப் மற்றும் ஆவின் பால் ஒப்பந்ததாரர் சுப்பு இசக்கி ஆகியோர் உடன் இருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here