கொரோனாவில் இறந்ததாக கூறிய குழந்தை ரூ.5 லட்சத்துக்கு விற்பனை மதுரை காப்பக உரிமையாளருக்கு வலை

0
1008

மதுரை ரிசர்வ் லைன் காவலர் குடியிருப்பு பகுதியில் இயங்கிவரும் இதயம் முதியோர் ஆதரவற்ற இல்லத்தினை இதயம் அறக்கட்டளையின் நிறுவனரான சிவகுமார் என்பவர் நடத்தி வருகிறார். இங்கு 100க்கும் மேற்பட்ட சாலையோர வசிக்ககூடிய ஆதரவற்ற முதியோர்களை மீட்டு பராமரித்துவருகின்றனர். இந்நிலையில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பாக மதுரை மாவட்டம் மேலூர் அருகேயுள்ள சேக்கிபட்டி கிராமத்தை சேர்ந்த ஆதரவற்ற மனநலம்குன்றிய ஐஸ்வர்யா என்ற இளம்பெண் அவரது பெண் குழந்தை உள்ளிட்ட 3 குழந்தைகளுடன் அனுமதித்துள்ளனர். இதனிடையே ஐஸ்வர்யாவின் மூன்றாவது ஆண் குழந்தை கொரோனாவால் இறந்ததாகவும், தத்தனேரி மயானத்தில் புதைக்கப்பட்டதாகவும் காப்பக உரிமையாளர் கூறியுள்ளார். ஆனால், ஆவணங்களில் குழப்பம் ஏற்படவே போலீசார் விசாரணையில் இறங்கினர்.

அதில், தத்தனேரி மயானத்தில் புதைக்கப்பட்டது வேறொரு குழந்தை என்றூ தெரியவந்தது. காப்பக உரிமையாளர் சிவகுமாரின் உதவியாளரான கலைவாணி மற்றும் தன்னர்வலர் ஒருவரிடம் நடத்திய விசாரணையில் மதுரை இஸ்மாயில்புரம் நகைக்கடை உரிமையாளருக்கு ரூ.5லட்சத்துக்கு குழந்தையை விற்றது தெரியவந்தது.
அங்கு தங்கியிருந்த கர்நாடகாவை சேர்ந்த ஸ்ரீதேவியும் தனது குழந்தை 10 நாட்களுக்கு முன்பு இறந்துவிட்டதாக காப்பக நிர்வாகி தெரிவித்ததாக கூறினார். அக்குழந்தையை கல்மேடு பகுதியில்விற்றது விசாரணையில் புலனானது.

மேலும், காப்பகமும் அனுமதியின்றி இயங்கியது தெரியவந்தது. இதையடுத்து அங்கு தங்கியிருந்த 82 பேர் மற்ற காப்பகங்களுக்கு அனுப்பப்பட்டனர். 6 தாய்மார்களுடன் 8 குழந்தைகளும் மற்றொரு காப்பகத்துக்குஅழைத்துச்செல்லப்பட்டனர்.

தலைமறைவான காப்பக உரிமையாளர் சிவகுமாரை தேடி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here