உலக முழுவதும் சுற்றுச் சூழல் வெப்பமயமாதலை தடுப்பதற்காக நடைபெறும் முயற்சிகளை அறிந்து கொள்ளும் இந்தத் தருணத்தில் இதற்கான நமது கடமைகள் என்ன என்பது பற்றியும் அறிவது அவசியம். கீழ்காணும் சிறு முயற்சிகள் நமது அடுத்த தலைமுறைக்கு மிகப் பெரிய நலன் பயக்கும்.
1. சுற்றுச்சூழல் மாற்றங்கள் குறித்து நம்முள் விழிப்புணர்வு ஏற்படுத்திக் கொள்வோம்.
2. மரங்களின் அத்தியாவசியத் தேவைகள் குறித்தும், மரங்கள் சார்ந்து வாழும் உயிரிகள் குறித்தும் குடும்பங்களில் உரையாடுவோம்.
3. வன விலங்குகள் சுற்றுச்சூழல் தகவமைப்பிற்குப் பேருதவி புரிகின்றன என்பதைப் புரிந்து கொள்வோம்.
4. புவி வெப்பமாதல் / பருவநிலை மாற்றங்கள் மர அழிப்பின் விளைவுகளே என்று புரிந்து கொள்வோம்.
5. எப்போதெல்லாம் வாய்ப்புகள் கிடைக்கிறதோ அப்போதெல்லாம் மரங்கள் நட்டு வளர்ப்பதற்கான முயற்சிகள் எடுப்போம்.
6. சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், சுற்றுச்சூழல் தன்னார்வ அமைப்புகள் எடுக்கும் முயற்சிகளுக்கு ஆதரவளிப்போம்.
7. நமக்கு சொந்தமான இடங்களில் நீர் ஆவியாதலை மட்டுப்படுத்துகின்ற மர வகைகளான சீமை வேலிக்கருவை, யூகலிப்டஸ் முதலான மரங்களை அகற்றுவோம்.
8. நாம் ஆசிரியர்களாக இருப்பின் மாணவர்கள் மத்தியில் மரம் வளர்ப்பின் அவசியத்தை எடுத்துரைத்து, அவர்களை மரம் நட்டு வளர்க்கும் திட்டங்களில் ஈடுபடுத்துவோம்.
9. நீர் நிலைகள், கண்மாய் கரைகள் பனை மரங்களை வளர்த்து மண் அரிப்பைத் தடுப்போம்.
10. கூடுமானால் மரம் வளர்த்தல் பற்றிய விழிப்புணர்வை மற்றவர்களிடம் எடுத்துச் செல்வோம்.
பூமித்தாயை அழிவிலிருந்து காப்பாற்ற மக்களின் மனதில் மாற்றம் வரவேண்டும். அந்த மாற்றம் நம்மிலிருந்து ஆரம்பிக்கட்டும்.
நன்றே செய்வோம்
அதை இன்றே செய்வோம் – அதற்கு
மனம் கொண்டு மரம் வளர்ப்போம்!!!