போலீசுக்கு கொலை மிரட்டல் கள்ள மது விற்றவர்கள் கைது

0
1050

தென்காசி மாவட்டம், சொக்கம்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திரிகூடபுரம் பகுதியில் சிறப்பு சார்பு ஆய்வாளர் வெள்ளத்துரை ரோந்து பணியில் ஈடுபட்ட போது அங்கு சட்டவிரோதமாக மதுபாட்டில்களை விற்பனை செய்து கொண்டிருந்த நபர்களை சோதனை செய்ய முயற்சித்தார்.

அப்போது அவர்கள் சிறப்பு சார்பு ஆய்வாளரை அவதூறாகப் பேசி, கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். அதையடுத்து அங்கு விரைந்த சார்பு ஆய்வாளர் சண்முகவேல்,கொலை மிரட்டல் விடுத்த திரிகூடபுரம் பகுதியை சேர்ந்த மாடசாமி என்பவரின் மகன் பிரகாஷ், சீனிபாண்டி என்பவரின் மகன் செல்வகுமார்(38) மற்றும் தவசி என்பவரின் மகன் கருத்தபாண்டி(46) ஆகிய மூன்று நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்து,செல்வகுமார் மற்றும் கருத்த பாண்டியை கைது செய்து சிறையில் அடைத்தார்.

மேலும்,அவர்களிடமிருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 15 மதுபாட்டில்கள் மற்றும் இரண்டு இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. தப்பி ஓடிய பிரகாஷ் என்பவரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here