கொரோனாவால் இறந்தவர் குழந்தைகள் உதவித்தொகை பெறுவது எப்படி?

0
1592


கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்து போனவர்களின் குழந்தைகளுக்கு பத்து லட்ச ரூபாய் பணம் தருவதாக அரசு கூறியுள்ளது.

அந்த தொகையை பெற, சென்னையில் வசிப்பவராக இருந்தால், ரிப்பன் கட்டடத்தில் உள்ள மாநகராட்சி அலுவலகத்தில், ரெவின்யூ அண்ட் டிசாஸ்டர் மேனேஜ்மென்ட், கோவிட்.19 டிபார்ட்மெண்டுக்கு சென்று இறப்பு சான்றிதழை வழங்கவேண்டும். இறப்பு சான்றிதழில் கொரோனாவால் தான் இறந்தார்கள் என்று குறிப்பிட்டு இருக்க வேண்டும்,தற்போது வழங்கப்படும் சான்றிதழ்களில் respiratory problem, heart problem என போட்டு விடுகிறார்கள்.அப்படி பதிவாகி விட்டால் அரசு உதவி பெற முடியாது.

மேலும், இறந்தவர்களின் குழந்தைகளுக்கு வாரிசு சான்றிதழ் ( LEGAL CERTIFICATE )இருக்க வேண்டும். அந்தந்த மாவட்டத்துடைய ஆதார் கார்டு, ரேஷன் கார்டு, வங்கி கணக்கு(RATION CARD, AADHAR CARD, BANK ACCOUNT ) இருக்க வேண்டும்.

அதே போல் தமிழ்நாட்டில் மற்ற மாவட்டங்களில் வசிப்பவர்கள் இறந்துவிட்டால் அந்தந்த மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலகம் சென்று ரெவின்யூ அண்ட் டிசாஸ்டர் மேனேஜ்மெண்ட் டிபார்ட்மெண்டில் விண்ணப்பத்துடன் கொரோனாவால் இறந்த சான்றிதழையும் கொடுக்கவேண்டும்.

தமிழ்நாடு அரசின் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை(Revenue and disaster management department (principal secretary to government))க்கான அதிகாரியாக குமார் ஜெயந்த் உள்ளார். அவரது அலுவலக தொலைபேசி எண்; 044.25671556,ஃபேக்ஸ்: fax.25672603






LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here