மாணவர்களுக்கு நுாதன தண்டனை

0
1476

மாணவர்களுக்கு புதுவித தண்டனையை உயர் நீதிமன்றம் அளித்துள்ளது.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி மாணவர்கள் சிலர் போதையில் வகுப்புக்கு வந்ததாக புகார் எழுந்தது. இதை தொடர்ந்து விசாரணை நடத்திய கல்லூரி நிர்வாகம் 8 மாணவர்களையும் வகுப்புக்கு அனுமதிக்கவில்லை.

தங்களை வகுப்பில் அனுமதிக்க கல்லூரி நிர்வாகத்துக்கு உத்தரவிடக் கோரி மாணவர்கள் தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி சம்பந்தப்பட்ட 8 மாணவர்களும் ஆகஸ்ட் 15, (சுதந்திர தினத்தன்று) அன்று விருதுநகரில் காமராஜர் பிறந்த இடத்தை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மாணவர்கள் சுத்தம் செய்யும் பணியை மேற்கொள்ள உத்தரவிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here