,
பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான விமானப் படை பெண் அதிகாரிக்கு, உச்சநீதிமன்றத்தால் தடை செய்யப்பட்ட இரு விரல் பரிசோதனை நடத்தப்பட்டதாக அந்த பெண் அளித்த புகாரை அடுத்து தேசிய மகளிர் போலீஸ் ஆணைய தலைவி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தேசிய மகளிா் ஆணையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில்,
பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான விமானப் படை பெண் அதிகாரிக்கு, உச்சநீதிமன்றத்தால் தடை செய்யப்பட்ட இரு விரல் பரிசோதனை நடத்தப்பட்டதாக நாளிதழ்களில் வெளியான செய்திகள் மூலம் தெரியவந்தது.
உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை மீறும் வகையிலும், பாதிக்கப்பட்ட நபரின் கண்ணியத்தைக் குலைக்கும் வகையிலும் நடந்து கொண்ட விமானப் படையின் செயல்பாடுகள் மிகவும் கண்டனத்துக்குரியதாகும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், தேசிய மகளிா் ஆணையத்தின் தலைவா் ரேகா சா்மா, விமானப் படை தளபதிக்கு எழுதியுள்ள கடிதத்தில், இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின் வழிகாட்டு நெறிமுறைகள் குறித்தும், உச்சநீதிமன்ற உத்தரவுகள் குறித்தும் விமானப் படை மருத்துவா்களுக்குத் தெளிவுப்படுத்துமாறு குறிப்பிட்டுள்ளாா்.
2014ஆம் ஆண்டு வட மாநிலத்தில் நடைபெற்ற சம்பவம் தொடா்பான வழக்கில் தீா்ப்பளித்த உச்சநீதிமன்றம், இரு விரல் பரிசோதனை என்பது பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவா்களின் தனியுரிமை, கண்ணியத்தை மீறுவதாக உள்ளது என்று குறிப்பிட்டு அந்தப் பரிசோதனை முறையைத் தடை செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.













