கார், பைக் ஷோரூம்களில் கொள்ளையடித்த நிர்வாண திருடன் கைது

0
1097

கோவை, பொள்ளாச்சி உள்ளிட்ட சில பகுதிகளில் உள்ள டூ வீலர் மற்றும் கார் ஷோரூம்களில் அடுத்தடுத்து திருட்டுச் சம்பவங்கள் நடைபெற்றது. இதையடுத்து போலீசார் அங்கு பொருத்தப்பட்ட சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது, ஷோரூம் உள்ளே வரும் மர்ம நபர் தனது உடைகள் கழட்டிவிட்டு, நிர்வாணமாக உள்ளே வந்து பணத்தை திருடி செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது. இதே போன்ற சம்பவங்கள் தமிழ்நாட்டில் சென்னை, மதுரை, திருச்சி உள்ளிட்ட நகரங்களிலும் நடைபெற்றுவந்தது fதெரியவந்தது.

நூதனமான முறையில் ஷோரூமுக்்குள் நிர்வாணமாக புகுந்து பணத்தை கொள்ளையடித்து வரும் நபர் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக இந்த நிர்வாண திருடன் குறித்து பல்வேறு தகவல்களை சேகரித்து வந்தனர் .சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது ஒரே நபர்தான் ஷோரூம்களை குறிவைத்து திருடியது தெரியவந்தது.ஒரு கட்டிடத்தில் இருந்து மற்றொரு கட்டடத்திற்கு தாவுவதும், நிர்வாண கோலத்தில் ஷோரூம்மில் திரிந்து கொள்ளையடித்து செல்வது போன்ற சினிமாவை மிஞ்சும் சிசிடிவி காட்சிகளை வைத்து   போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த பாண்டியன் என்பவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் பாண்டியன் கோவையில் உள்ள தனியார் ஹோட்டலில் பணியாற்றி வந்த நிலையில் கொரோனா ஊரடங்கு காலத்தில் வேலை இல்லாமல் இருந்ததால், திருட்டு வேலைகளில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. குறிப்பாக கோவை, சென்னை , ஈரோடு, திருச்சி, மதுரை உள்ளிட்ட 17 இடங்களில் டூவீலர் , கார் ஷோரூம்களை மட்டும் குறி வைத்து நிர்வாணமாக உள்ளே சென்று திருடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். ஒரு சில இடங்களில் திருடிய ஷோரூம் வாசலில் கற்பூரம் பற்ற வைத்து நன்றி தெரிவித்து சென்றதாகவும் விசாரணையில் கூறியுள்ளார். அதேபோல் திருட்டில் ஈடுபடும் போது உடை அணியாமல் இருப்பதற்கும் ஒரு காரணத்தைக் கூறி போலீசாரை அசர வைத்துள்ளார் பாண்டியன். அதில் சிசிடிவி காட்சி பதிவில் தான் அணிந்திருக்கும் ஆடை பற்றி தெரிந்தால், அதை வைத்து போலீசார் பிடித்து விடுவார்களோ என்ற அச்சத்தில் ஆடைகள் இல்லாமல் ஷோரூம்களில் திருடி வந்தது தெரியவந்தது. இதையடுத்து சிவகங்கை மாவட்டம், ஒக்கூர் பழய வழுக்கு தெருவை சேர்ந்த கோச்சடை என்ற பாண்டியனை கைது செய்த சிங்காநல்லூர் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here