புளியங்குடி அருகே ஆசிரியர்கள் வீட்டில் திருட்டு

0
1381

 

புளியங்குடி அருகே வம்சவிருத்தி நகரில்  வசிக்கும் விஜயகுமாரும் அவர் மனைவியும் ஆசிரியர்களாக வள்ளியூர்,திருநெல்வெலியில் பணி புரிகின்றனர். இதனால் இங்குள்ள வீட்டை பூட்டி விட்டு நெல்லையில் உள்ள வீட்டில் தங்கி விடுவார்கள்.

அவர்கள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் உள் அறையில் இருந்த அலமாரியை உடைத்து அங்கிருந்த 18 கிராம் தங்க நகைகள் மற்றும் ரொக்கம் 40ஆயிரம் எடுத்து கொண்டு சென்று விட்டனர்.

மறுநாள் பூட்டு உடைக்கப்பட்டதை பார்த்த அக்கம் பக்கத்தினர் சொக்கம்பட்டி காவல் நிலையத்திற்கும் ,விஜயகுமாருக்கும் தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த உதவி ஆய்வாளர் வேல்பாண்டி வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here