நாங்குநேரி சட்டமன்ற இடைத் தேர்தலுக்கான பொறுப்பாளர்களின் பட்டியலை தமிழக காங்கிரஸ் இன்று வெளியிட்டது.இதில் தொகுதி பொறுப்பாளர்களில் ஒருவராக அதிமுக நெல்லை புறநகர் மாவட்ட சிறுபான்மை பிரிவு துணைச்செயலாளரான கே .பி .கே .செல்வராஜை அறிவித்தது.
அவர் ஊரில் இல்லாததால் சிலருக்கு சந்தேகமும் வந்துவிட்டது. அதற்கேற்றாற்போல் வெகுநேரம் அவரது கைபேசி இனைப்பும் கட்சியினருக்கு கிடைக்கவில்லை. இதை பயன்படுத்தி டெல்லிக்கு சென்று காங்கிரசில் இணைந்துவிட்டார் என்று சிலர் கிளப்பிவிட்டனர்.
ஒருவழியாக கைபேசி இணைப்பு கிடைத்து, அவர் மேகாலயாவில் நடந்த கூட்டத்தில் சிஎஸ்ஐ டயோசிசன் சார்பில் பங்கேற்றிருப்பதாக தெரிந்தபின்பே வதந்தி அடங்கியது.
இவ்வளவு பெரிய களேபரத்தை உருவாக்கிய காங்கிரஸ், மிகவும் நிதானமாக ‘அறிவிப்பில் பெயர் மாறிவிட்டது’ என்று அறிவித்தது.















