மதுரை ஆதீனம் உடல்நிலை கவலைக்கிடம்

0
552

தமிழகத்தின் சைவ சமயத் திருமடங்களில் ஒன்றான மதுரை ஆதீனம் திருஞானசம்பந்தரால் சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன்பு தோற்றுவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.இம்மடத்தின் 292வது பீடாதிபதியாக அருணகிரிநாதர் (77) பொறுப்பில் உள்ளார்.

உடல்நலக்குறைவு காரணமாக கடந்த இரு நாட்களுக்கு முன்பு அவர் மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சுவாசக் கோளாறு ஏற்பட்டதால் வென்டிலேட்டர்  பொருத்தப்பட்டது. இன்று காலையிலிருந்து அவரது உடல்நிலை கவலைக்கிடமானது.  மருத்துவர்கள் தொடர் சிகிச்சை அளித்துவருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here