தாய் இரண்டாம் திருமணம் செய்ததை அறிந்த மகள் தற்கொலை

0
193

வடவள்ளி கணுவாய் ரோடு பகுதியைச் சேர்ந்த சேர்ந்தவர் கனகவல்லி ( 30). இவருக்கும் பூதப்பாண்டி என்பவருக்கும் கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி ஒரு மகன் மகள் இருந்தனர். மகன் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு டெங்கு காய்ச்சல் வந்து இறந்தார். இதையடுத்து கனகவல்லிக்கும் பூதபாண்டியன் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. 

கனகவல்லி கணவர் பூதப்பாண்டியை  பிரிந்து அந்தோணி சாமுவேல் என்பவரை திருமணம் செய்துகொண்டு மகள் பிரியதர்ஷினி உடன் தனியாக வசித்து வந்தார். பிரியதர்ஷினி கணவாய் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்தார்.

சிறுவயதிலேயே தாயாருடன் வந்ததால் தன்னுடைய உண்மையான தந்தை யார் என்பது பிரியதர்ஷினிக்கு தெரியாமல் இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக பிரியதர்ஷினி தனது தாயார் இரண்டாவது திருமணம் செய்து கொண்டு தற்போது வாழ்ந்து வருவது தெரியவந்தது. இதனால் மனமுடைந்த நிலையில் பிரியதர்ஷினி இருந்து வந்தார்.

இந்நிலையில் நேற்று மதியம் வெளியில் சென்ற கனகவள்ளி  மீண்டும் வீடு திரும்பினார். அப்போது வீட்டின் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. கதவை பலமுறை தட்டியும் திறக்காததால் அருகில் உள்ளவர்கள் உதவியுடன் கனகவல்லி வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தார் .அப்போது பிரியதர்ஷினி வீட்டில் பிணமாக தொங்கி கொண்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த வடவள்ளி  போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர் .உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் பிரியதர்ஷினியின் உடல்  அவரது தந்தை பூதப்பாண்டி இடம் ஒப்படைக்கப்பட்டது.


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here