திருவேடகம் கோயிலில் ஏடு எதிர் ஏறிய நிகழ்வு

0
587

வரலாற்று சிறப்புமிக்க, திருவேடகம் ஏடகநாதர் கோவில் ஏடு எதிர் ஏறிய நிகழ்வு பக்தர்கள் இன்றி எளிமையாக நடைபெற்றது.

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே திருவேடகத்தில் உள்ள ஏலவார் குழலி அம்மன் சமேத, ஏடகநாதர்சுவாமி கோயில் மிகவும் வரலாற்று சிறப்புமிக்கதாகும். இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆவணி பவுர்ணமி அன்று ஏடு எதிரேறிய திருவிழா நடைபெறும்.


அரசு உத்தரவின் பேரில், வெள்ளி, சனி,ஞாயிறு ஆகிய மூன்று நாட்களும் கோயிலை மூட உத்தரவிட்டிருந்ததால் , இந்த ஸ்தலத்தில் நடத்தக்கூடிய முக்கிய திருவிழாவான திரு ஏடு எதிரேறிய திருவிழா பக்தர்கள் இல்லாமல் மிக எளிமையாக நடைபெற்றது. கோவில் அருகே உள்ள வைகை ஆற்றுக் கரையில், திருஞானசம்பந்தர் சன்னதியிலிருந்து, ‘ வாழ்க அந்தணர்’ என்ற வாசகம் பொறித்த செப்புத் தகட்டில் உள்ள ஏடு கேடயத்தில் அலங்காரமாகி வைகையாற்றில் படித்துறைக்கு வந்து சேர்ந்தது.
இங்கு ஓதுவார்கள் ஸ்தல வரலாற்றையும்,ஏடு எதிரேறிய வரலாற்றையும் பக்திப் பாடலுடன் எடுத்துரைத்தனர்.


பின்னர், வைகை ஆற்று வெள்ளத்தில் ஏடு எதிர்கொள்வது போல் காட்சி நடைபெற்றது.
பின்னர், பூஜைகள் நடந்து பிரசாதம் வழங்கினார்கள். கோயில் செயல் அலுவலர் இளஞ்செழியன் ,பரம்பரைஅறங்காவலர் சேவுகன் செட்டியார்,கோவில்பணியாளர்கள் மற்றும் பிரதோஷம் கமிட்டியினர் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here