இலங்கை அதிபராக பதவியேற்ற கோத்தபயவுக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி, அவரை நிதியாவுக்கு வரும்படி அழைத்திருந்தார். அதையேற்று இன்று அவர் இந்தியா வருகிறார். இங்கு குடியரசு தலைவர், பிரதமரை சந்தித்து இருதரப்பு உறவு பற்றி பேசுகிறார்.
ஏற்கனவே போர்க்குற்றம் சுமத்தப்பட்ட நிலையில், தமிழர்களின் சாவுக்கு நீதி கேட்கும் சர்வ தேச விசாரணையை முடக்குவதில் ராஜபட்சே சகோதரர்கள் முக்கிய பங்கு வகித்ததால் அவரது வருகையை தமிழக கட்சிகள் பெரும்பாலானவை எதிர்த்த்துள்ளன.
சமூக வலைத்தளங்களிலும் சர்வதேச தமிழ் சமூகம் அவரது வருகைக்கு கண்டனங்களை பதிவிட்டிருந்தது.
வைகோ இன்று போராட்டம் அறிவித்துள்ளர். இந்நிலையில் கோத்தபய இந்தியா வருகிறார்.















