சங்கரன்கோவில் அருகே குருவிகுளத்தை அடுத்த அத்திப்பட்டியை சேர்ந்தவர் மாசானமுத்து. வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி முனீஸ்வரி (வயது 38). இவர் தீப்பெட்டி தொழிற்சாலையில் வேலை பார்த்து வருகிறார். இவர்களது மகன் முத்துக்குமார் (14). இவன் கழுகுமலை அருகே உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறான்.
இந்நிலையில் நேற்று முன்தினம் பள்ளிக்கு செல்வதாக கூறி சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை. அக்கம் பக்கம் மற்றும் உறவினர் வீடுகளில் தேடியும் அவன் கிடைக்க வில்லை. எங்கு சென்றான்? என தெரியவில்லை.
மேலும் அவன் ஏ.டி.எம்.கார்டையும் கொண்டு சென்றுள்ளான். இந்நிலையில் ஏ.டி.எம். கார்டில் இருந்து ரூ.18 ஆயிரம் எடுத்துள்ளான். இது குறித்து குருவிகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான பள்ளி மாணவனை தேடி வருகிறார்கள்.








