நெல்லை ராணி அண்ணா கல்லூரியில் பணி புரியும் பேராசிரியரை பதவி நீக்கம் செய்யக்கோரி பேராசிரியைகள் போராட்டம் நடத்துகின்றனர். இரவு நேரத்திலும் கல்லூரிக்குள் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர்.
பேராசிரியர் ஒருவர் மாணவியை அழைத்து பத்திரிக்கையாளர் சந்திப்பை நடத்தி கல்லூரியைப் பற்றி அவதூறு கூறியதாகவும், இது குறித்து புகார் தெரிவித்த போது பேராசிரியர் சார்ந்த சாதி அமைப்பு மூலம் முதல்வர், பேராசிரியைகள், மாணவிகளை மிரட்டியதாகவும் குற்றம் சாட்டுகின்றனர்.
இன்று மாலை மூன்று முப்பது மணி அளவில் கல்லூரி முடிந்ததும் வளாகத்துக்குள் அமர்ந்து போராடிய பேராசிரியர்கள், பேராசிரியைகள் போராட்டத்தை தொடர இருப்பதாக தெரிவித்தனர்.