ஜல்லிக்கட்டு காளைகளுக்கு பரிசோதனை

0
886

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா, அவனியாபுரத்தில் தைத்திங்கள் முதல்
நாள் பொங்கலன்று ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெறுவது வழக்கம். அதனைத் தொடர்ந்து, பாலமேடு மற்றும் அலங்காநல்லூர் பகுதியில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெறும்.
தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான காளைகளை கால்நடை துறையினர் பரிசோதித்து சான்றிதழ் அளித்த பின்னரே ஜல்லிக்கட்டு போட்டியில் அனுமதிக்கப்படும்.

அதன்படி ஜல்லிக்கட்டு போட்டிக்கான காளைகளை கால்நடை துறையினர் பரிசோதனை செய்தனர். திருப்பரங்குன்றம் கால்நடை மருத்துவமனையில் 300க்கும் மேற்பட்ட ஜல்லிக்கட்டு காளைகள் பரிசோதனை செய்யப்பட்டது. கால்நடை மருத்துவர் சிவக்குமார் தலைமையில், கால்நடை ஆய்வாளர் உள்பட 7 பேர் கொண்ட குழுவினர், மாட்டின் உயரம் ,கொம்பு இடைவெளி, திமில், மாட்டின் கண் ஆகியவற்றை பரிசோதித்தனர்.


‘இந்தாண்டு நாட்டு மாட்டு இனங்கள் மட்டுமே ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கு பெறவேண்டும் என்ற அடிப்படையில் பல சோதனைகள் நடைபெற்றது.

ஜல்லிக்கட்டு மாடுகளுக்கான உயரம் 120 சென்டி மீட்டர் ,
கொம்பு கூர்மையாக இருக்க கூடாது, கண்பார்வை, கொம்பு இடைவெளி, உடற்தகுதி போன்றவை வரையறுக்கப்பட்டது. மாட்டின் புகைப்படம், மாட்டின் உரிமையாளர் ஆதார்கார்டு போன்றவையும் சரிபார்க்கப்பட்டது. பரிசோதனை செய்தபின் சான்றிதழ் வழங்கப்பட்டது.

சான்றிதழ் வழங்கப்பட்ட மாடுகள் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும்
ஜனவரி 14ம் தேதி அன்று மீண்டும் பரிசோதனை செய்யப்பட்டு ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படும்..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here