காதலி வீடு புகுந்து தாக்குதல் நடத்திய கபடி பயிற்சியாளர் அணியோடு கைது

0
493

கோவை தடாகம் ரோடு கோவில் மேடு பகுதியை சேர்ந்த குமார் என்பவரின் மகன் மணிகண்டபிரபு (41). இவர் கூலி வேலை செய்து வருகிறார். இவரது மகள் சௌமியா கபடி வீராங்கனையாக இருந்து வருகிறார். ஆனந்தா ஹவுஸங் காலனி பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்பவரின் மகன் பிரவீன்குமார் (20) கபடி பயிற்சியாளராக இருந்து வருகிறார். பிரவீன் குமார் சௌமியாவிற்கு கபடி பயிற்சி அளிக்கும் போது இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து பிரவீன்குமார் சௌமியாவின் தந்தை மணிகண்ட பிரபுவிடம் தான் சௌமியாவை காதலிப்பதாக கூறியிருக்கிறார். இதையடுத்து மணிகண்ட பிரபு ஆத்திரமடைந்து பிரவீன்குமாரை திட்டியுள்ளார். இதனால் இரு தரப்பினர் இடையே கருத்து வேறுபாடு இருந்து வந்தது.

இந்நிலையில் நேற்று இரவு சௌமியாவின் வீட்டிற்கு வந்த தனது டீம் நண்பர்களுடன் வந்த பிரவீன்குமார் மணிகண்ட பிரபுவிடம் தகராறில் ஈடுபட்டார். தகராறு முற்றிய நிலையில் மணிகண்ட பிரபுவை தாக்கத் துவங்கினர். இதில மணிகண்ட பிரபுவுக்கு காயம் ஏற்பட்டது. ஆத்திரம் தீராத பிரவீன் குமார் மற்றும் அவரது நண்பர்கள் மணிகண்டபிரபு வீட்டின் கதவை அடித்து உடைத்தனர். இதில் காயமடைந்த மணிகண்ட பிரபு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து அவர் துடியலூர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் பிரவீன்குமார் (20) மற்றும் அவரது நண்பர்களான கோவில் மேடு பகுதியை சேர்ந்த முருகன் என்பவரின் மகன் ஸ்ரீஹரி (21), கோவில் மேடு நெசவாளர் காலனி பகுதியை சேர்ந்த தாமஸ் என்பவரின் மகன் டினோ (22 )மற்றும் அவரது சகோதரர் பினோ( 22 ), நெசவாளர் காலனி பகுதியை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் என்பவரின் மகன் சந்துரு (19), கோவில் மேடு மூர்த்தி என்பவரின் மகன் குட்டி (59 )மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த முருகேசன் என்பவரின் மகன் ராஜேஷ் (21) ஆகிய 7 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here