மலைவாழ் மக்களுக்கு நேரில் சென்று காவல்துறை உதவி

0
1545

நெல்லை மாவட்டம் பாபநாசம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள மலைவாழ் மக்களுக்கு வீடுவீடாக சென்று நிவாரண அத்யாவசிய பொருட்களான அரிசி மற்றும் மளிகை பொருட்களை காவல்துறையினர் வழங்கினர்.

கொரோனா இரண்டாம் அலை அதிகரித்து வரும் நிலையில், பொது ஊரடங்கு அமலில் உள்ளதால் மலைவாழ் மக்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்தனர்.

இந்நிலையில் நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் உத்தரவின்படி ஏடிஎஸ்பி சுப்புராஜ் தலைமையில் விக்கிரமசிங்கபுரம் காவல் நிலைய ஆய்வாளர் சண்முகம் முன்னிலையில் காணிக்குடியிருப்பு,இஞ்சிகுழி,சின்ன மயிலாறு, பெரிய மயிலாறு, சேர்வலாறு காணிக்குடியிருப்பு, அகஸ்தியர் நகர காணிகுடியிருப்பு, பகுதி மக்களுக்கு வீடுவீடாக சென்று நிவாரண பொருட்களை வழங்கினர்,

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here