கோவையில் பெண் இன்ஸ்பெக்டர் திடீர் சஸ்பெண்ட்

0
200

கோவை மாவட்ட காவல் துறையில் தீவிர குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டராக கலையரசி பணிபுரிந்து வருகிறார். இவர் கோவை மாநகர காவல் துறையில் கடந்த ஆண்டு பொருளாதார குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தார். அப்போது மோசடி நிதி நிறுவனங்கள் மீது பெறப்பட்ட புகார் மனுக்களில் உடனடியாக வழக்கு பதிவு செய்யாமல், மிகவும் கால தாமதமாக வழக்கு பதிவு செய்து, பதிவு செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகளுக்கு சாதகமாக செயல்பட்டு வந்ததாக புகார் எழுந்தது .

இதுகுறித்து காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு புகார் அனுப்பப்பட்டிருந்தது. இது குறித்து விசாரணை நடத்திய கோவை சரக காவல்துறை டிஐஜி இன்று இன்ஸ்பெக்டர் கலையரசி சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here