பல மணி நேரமாக கிணற்றுக்குள் உயிருக்கு போராடிய பசு மாடு உடனடியாக மீட்ட தியணைப்பு துறையினர்….
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள நடுநாலுமூலைக்கிணறு ஊரைச்சேர்ந்த பால் துரை என்பவர் விவசாயம் செய்து வருகிறார்
மேலும் இவர் 20க்கும் மேற்ப்பட்ட மாடுகளை வைத்து பால் வியாபாரம் செய்து வருகிறார்
இந்நிலையில் மாடுகளை அவருக்கு சொந்தமான தோட்டத்தில் இரவு நேரத்தில் மேய்ச்சலுக்கு அனுப்புவது வழக்கமாக இருந்துள்ளது இந்தநிலையில் மேய்ச்சலுக்கு அனுப்பிய மாடுகளை காலை 4 மணிக்கு பால் கறப்பதற்கு மாடுகளை தோட்டத்தில் இருந்து வெளியேற்றியுள்ளார் இதில் ஒரு மாடு மட்டும் காணவில்லை உடனே அவர் தோட்டத்தின் பகுதிகளில் தேடியுள்ளார்
இதில் தோட்டத்தில் இருந்த தரைமட்ட கிணற்றுக்குள் மாடு விழுந்து ஆபத்தான நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார் என்ன செய்வதென்று அறியாமல் உடனடியாக திருச்செந்தூர் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்துள்ளார்.
உடனடியாக திருச்செந்தூர் தீயணைப்புதுறை சிறப்பு நிலைய அலுவலர் மோகன் தலைமையில் தீயணைப்புதுறை ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கிணற்றுக்குள் உயிருக்கு போராடி கொண்டிருந்த மாட்டை கிணற்றுக்குள் விழுந்நது தீயணைப்பு வீரர்கள் மற்றும் இளைஞர்களும் சேர்ந்து கயிற்றின் மூலமாக கட்டி மாட்டினை பத்திரமாக மீட்டனர் ..
இதானால் மாட்டின் உரிமையாளர் மற்றும் இளைஞர்கள் மகிழ்ச்சியுடன் தீயணைப்புதுறை வீரர்களுக்கு நன்றியை தெரிவித்தனர் .