புறப்படும் நேரம் பிரச்சினை பஸ் கண்டக்டர்கள் மோதல்

0
439


கோவை மதுக்கரை அடுத்த குரும்பபாளையம் ரோட்டை சேர்ந்தவர் கார்த்திக் (24 ).இவர் கோவையில் உள்ள ஒரு தனியார் பஸ் நிறுவனத்தில் கண்டக்டராக வேலை பார்த்து வருகிறார் .நேற்று கோவை திருச்சி ரோட்டில் உள்ள பஸ் ஸ்டாப்பில் பஸ் பயணிகளுக்கு டிக்கெட் கொடுத்துக் கொண்டிருந்தார் .அப்போது அங்கு வந்த மற்றொரு தனியார் பஸ் டிரைவர் ,கண்டக்டர்கள் ஆனந்த், அருண் உட்பட 4பேர் சேர்ந்து கண்டக்டர் கார்த்திக்கை அடித்து உதைத்தனர் .இதில் இவருக்கு காயம் ஏற்பட்டது. டைமிங் தகராறு தொடர்பாக இந்த மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து கார்த்திக் ரேஸ்கோர்ஸ்காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.போலீசார் தனியார் பஸ் டிரைவர், கண்டக்டர்கள் ஆனந்த் ,அருண் உட்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து தேடி வருகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here