‘டிரைவ் த்ரு வேக்சின்’எனப்படும், காரிலேயே அமர்ந்து தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை தமிழகத்திலேயே கோவையில் முதல் முறையாக செயல்படுத்தியுள்ளது பிக்கி புளோ அமைப்பு . சந்திரன் யுவா என்ற அமைப்புடன் சேர்ந்து இதை நிறைவேற்றியுள்ளது.
பிக்கி புளோ கிளையின் கோவை தலைவர் மற்றும் செயற்குழு உறுப்பினர் ரிடிஷா நிவேதா இது குறித்து கூறுகையில், ஏற்கனவே இணைய தள படிவத்தில் முன்பதிவு செய்துள்ளோருக்கு மட்டும் இந்த தடுப்பூசி செலுத்தப்பட்டது. நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் கார்களில் முன்று வரிசையாக நிறுத்தப்பட்டு, தடுப்பூசி சமுக இடைவெளி விதியை பின்பற்றி செலுத்தப்பட்டது. கார்களில் இதற்கென தனி அடையாளமிடப்பட்டு, இ. பாஸ் வழங்கப்பட்டு இருந்தது. இவர்களுக்கு உதவ உதவியாளர்களும் நியமிக்கப்பட்டனர்,” என்றார்.
காரில் இருந்தவாறே தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் இந்த முறையால், முதியோர் மாற்றுத்திறனாளிகள் பயன்பெற்றனர்.