எஸ் பி வேலுமணி வீடு உள்ளிட்ட 52 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

0
467

முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணியிடம் ஒப்பந்தப் பணிக்கு பணம் கொடுத்து ஏமாந்ததாக நேற்று ஒப்பந்தக்காரர் ஒருவர் புகார் கூறியிருந்தார். இந்நிலையில், இன்று காலை சுமார் 7 மணியளவில் சென்னை எம்.எல்.ஏ. விடுதியில் உள்ள தனது அறையிலிருந்து வேலுமணி ஊருக்கு புறப்படவிருந்த நிலையில், இணை கமிஷனர் ராமதாஸ் தலைமையில் அங்கு வந்த லஞ்ச ஒழிப்பு துறையினர் அவரது அறையை சோதனையிட்டனர்.

அதேவேளை, தஞ்சாவூர், கோவை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் வேலுமணி தொடர்புடைய 52 இடங்களில் லஞ்ச ஒழிப்பு சோதனை நடந்தது. கோவை வடவள்ளியில் வேலுமணிக்கு நெருங்கிய சகாவான பொறியாளர் சந்திரசேகர் வீட்டிலும் சோதனை நடந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here