திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே தமிழக ஆந்திரா எல்லையில் உள்ள சிந்தகாமணி பெண்டா, மாதகடப்பா, தேவராஜாபுரம் உள்ளிட்ட மலைப்பகுதிகளில் டி.எஸ்.பி பழனி செல்வம் மற்றும் கலால் பிரிவு காவல் ஆய்வாளர் தமிழரசி ஆகியோர் தலைமையிலான 8 பேர் கொண்ட போலீசார் குழு
நடத்திய அதிரடி சோதனையில் சிந்தகாமணி பெண்டா மலையில் கள்ள சாராயம் காய்ச்ச தயாராக வைக்கப்பட்டிருந்த சுமார் 2 ஆயிரம் லிட்டர் கள்ள சாராய ஊரல்கள், பேரல்கள் மற்றும் சாராய அடுப்புகள் ஆகியவற்றை அழித்தனர்.
மேலும், தப்பியோடிய கள்ள சாராய கும்பலை போலீஸார் தேடி வருகின்றனர்.













