தூத்துக்குடி தாளமுத்துநகர் பகுதியை சேர்ந்த கணேசன் (56) என்பவரது வீட்டில் 25 அடி ஆழமுள்ள பழைய கிணறு ஒன்று வெகு நாட்களாக திறக்கப்படாமல் இருந்தது.
இந்த கிணற்றில் நேற்று (ஆகஸ்ட் 4) அவர்களது உறவினரான மாரிமுத்து (36) மற்றும் கணேசன் ஆகிய இருவரும் கிணற்றில் இறங்கியுள்ளனர்.
அப்போது மூச்சு திணறல் ஏற்பட்டு இருவரும் உயிரிழந்தனர். இதுகுறித்து தாளமுத்துநகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.









