நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம், ஊர்க்காடு – சாட்டுபத்து சாலையில் ஊர்க்காட்டைச் சேர்ந்த இளைஞர்கள் அமர்ந்திருந்தபோது அந்த வழியாக குளித்துவிட்டு வந்த மற்றொரு பிரிவினர் அமர்ந்திருந்த இளைஞர்களின் மோட்டார் பைக் மீது மோதியதில் இரு பிரிவினரிடையே தகராறு ஏற்பட்டது.
இதையடுத்து இரு பிரிவினரும் எதிர்தரப்பு குடியிருப்புப் பகுதியில் வீடுகள் மீது தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் வீடுகள் சேதமடைந்தன. தகவலறிந்த அம்பாசமுத்திரம் காவல் துணைக் கண்காணிப்பாளர் பிரான்சிஸ் தலைமையில் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.
மேலும் தாக்குதலில் ஈடுபட்டதாக இருதரப்பையும் சேர்ந்த 11 பேர் மீது அம்பாசமுத்திரம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.







