ரெட்டியார்பட்டி பள்ளி தலைமை ஆசிரியருக்கு ஆசிரியை கணவர் கொலை மிரட்டல்

0
1339

திருநெல்வேலி மாவட்டம், ரெட்டியார்பட்டியில் அரசு மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் ஆசிரியர்களும் மாணவர்களும் குழுக்களாக இயங்கி வருவதாக குற்றச்சாட்டு உண்டு.

இந்நிலையில், ஹரிராமா என்பவர்அண்மையில் நடைபெற்ற மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வில் மாறுதல் ஆணை பெற்று ரெட்டியார்பட்டி அரசு மேல் நிலைப் பள்ளிக்கு பொறுப்பேற்றார்.

பள்ளியில் இடைநிலை ஆசிரியராகப் பணியாற்றும் சந்திரகலா என்பவர் பொறுப்பேற்றிருந்த பசுமைப் படையின் செயல்பாடு குறித்து விசாரித்து கண்டித்துளார்.

இதுகுறித்து தனது கணவரிடம் தொலைபேசியில் ஆசிரியை கூற, பள்ளிக்கு வந்த கணவர் லிபின், தன்னை திட்டி மிரட்டியதாக தலைமை ஆசிரியர் பெருமாள்புரம் போலீசில் புகார் தெரிவித்துள்ளார். சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here