பீகாரில் கடந்த மூன்று தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால், தலைநகர் பாட்னா உள்ளிட்ட நகரங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பெய்த பெருமழையால், நூற்றுக்கணக்கான வீடுகளில் வெள்ள நீர் புகுந்தது.
இந்த கனமழை வெள்ளத்தில், துணை முதல்வர் சுஷில் மோடி தனது குடும்பத்தினருடன் சிக்கிக் கொண்டார். பாட்னாவில் அவரது வீட்டை சுற்றிலும் மழை நீர் வெள்ளமாக சூழ்ந்திருந்தது. இதுதொடர்பாக தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த அவர்கள், துணை முதல்வரையும், அவரது குடும்பத்தினரையும் பத்திரமாக மீட்டெடுத்தனர்.