காங்கிரசுக்கு காம்ப்ளான்: மண்டலத்துக்கு 3 பேர் நியமனம்

0
1049

டெல்லியில் காங்கிரஸ் நிர்வாகிகளுடன் கட்சியின் தற்காலிக தலைவர் சோனியா காந்தி ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் மூத்த தலைவர்கள் குலாம் நபி ஆசாத், கே.சி.வேணுகோபால், ஏ.கே.அந்தோனி, கே.எஸ்.அழகிரி ஆகியோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், காங்கிரசை வலுப்படுத்தவும், பல்வேறு பிரச்சினைகள், கருத்தியல் நிலைப்பாடுகள் குறித்த கட்சி தகவல்களை முன்னெடுத்துச் செல்வதற்கும், காங்கிரஸைச் சுற்றியுள்ள எந்தவொரு கட்டுக்கதையை உடைப்பதற்கும் மண்டலத்திற்கு 3 பேரை பொறுப்பாளர்களாக நியமிக்க கட்சி முடிவு செய்து உள்ளது.

மண்டல வாரியாக மூன்று பொறுப்பாளர்கள் நியமிக்கப்படுவார்கள் என்றும், மூன்று பேரில் ஒரு பெண் மற்றும் எஸ்சி / எஸ்டி / சிறுபான்மை / ஓபிசி பின்னணியைச் சேர்ந்தவர் இருப்பார். ஒவ்வொரு மண்டலமும் 4-5 மாவட்டங்களைக் கொண்டிருக்கும் என காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here