கொரோனா பாதித்த வாடிக்கையாளர் நகையை ஏலம் விட்ட தனியார் வங்கி

0
1090

தேனி மாவட்டம் போடி கிருஷ்ணா நகர் பகுதியில் அமைந்துள்ள தனியார் வங்கியில் மற்ற வங்கிகளை காட்டிலும் நகைக்கு அதிக பணம் கொடுப்பதால் அதிகளவிலான சிறு வியாபாரிகளும் வணிகர்களும் பொதுமக்களும் நகைகளை அடகு வைத்து உள்ளனர்.

தமிழகத்தில் தற்போது அறிவித்துள்ள முழு ஊரடங்கு காரணமாக பொதுமக்கள் நடமாட முடியாத நிலையில் கடந்த இரண்டு மூன்று மாதங்களில் வட்டி கட்டாத 71 வாடிக்கையாளர்களுக்கு நகைகள் ஏலத்துக்கு விடப் போவதாக 31.05.2021 அன்று தபால் மூலம் தகவல் அளித்துள்ளனர்.

மிக குறுகிய காலத்தில் தனியார் வங்கி நகை ஏலத்துக்கு விடுவதை அறிந்த வாடிக்கையாளர்கள் செய்வதறியாது இந்த முழு ஊரடங்கு நேரத்தில் வட்டி கட்டுவதற்கு பணம் ஏற்பாடு செய்ய முடியாமல் திணறினர்.

சில வாடிக்கையாளர்கள் வங்கி மேலாளரிடம் தொடர்பு கொண்டு சிறிது அவகாசம் கொடுங்கள் என்று கேட்டுள்ளனர்.

வாடிக்கையாளர்களின் கோரிக்கையை ஏற்காமல் 31.5.21 அன்று 71 வாடிக்கையாளரின் நகைகளை ஏலத்துக்கு அனுப்பி வைத்துள்ளார்.

நேற்றும் இன்றும் வட்டி கட்டலாம் என வங்கிக்கு சென்ற வாடிக்கையாளர்கள் தங்களது நகை ஏலத்துக்கு சென்றதை அறிந்து வங்கி வாசல் முன்பாக பரிதவித்து நின்றனர்.

இது தொடர்பாக 165 கிராம் நகையை அடகு வைத்து வட்டி கட்ட வந்த வாடிக்கையாளர் நாகராஜ் பிரியங்கா தம்பதியினர்,

.

கடந்த 2020 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 165 கிராம் மதிப்பிலான நகைகளை 6.50 லட்சம் ரூபாய்க்கு இந்த தனியார் வங்கியில் அடகு வைத்துள்ளனர்.தற்போது வரை வட்டியுடன் சேர்த்து ஏழு லட்ச ரூபாயாக உயர்ந்துள்ளது.

தொடர்ச்சியாக ஏற்பட்ட கொரோனா ஊரடங்கு காரணமாக தொழிலில் முழுமையாக ஈடுபட முடியாத நிலையிலும் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்த காரணத்தாலும் அவர்களால் வட்டி கட்ட முடியவில்லை. வட்டி கட்டுவதற்காக பணம் ஏற்பாடு செய்து வங்கிக்கு சென்று கேட்டபோது நகைகள் ஏலத்துக்கு ஏற்கனவே சென்றுவிட்டதாக வங்கி மேலாளர் தெரிவித்துள்ளார்.

அடகு வைத்த நாளிலிருந்து ஆறு மாத காலத்திற்குள் வங்கி நகைகளை ஏலத்திற்கு அனுப்பி விட்டதாக வங்கி மேலாளர் கூறியுள்ளார்.

இது மோசடியான செயல் . தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுத்து தங்களது நகைகளை மீட்டு தர வேண்டும்.

என்று இந்த தம்பதியினர் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here